முதல் நாள் பள்ளிக்கூடம்! ஆசை ஆசையாக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! விதிகளை மீறியதே காரணம்!

வேன் கம்பியில் சீருடை மாட்டி இழுத்ததால் கீழே விழுந்த சிறுவன் மீது பள்ளி வேன் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவெண்ணைநல்லூரில் உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல். இவரது மகன் முகுந்தன் (6 வயது). திருவெண்ணைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு சேர்ந்துள்ள முகுந்தன், இன்று பள்ளிக்குச் சென்றான். வீடு திரும்பும்போது, மாலையில் வீட்டின் அருகே வேன் நின்றதும்

கீழே இறங்கியுள்ளான். அப்போது, எதிர்பாராவிதமாக வேன் கம்பியில் அவனது சீருடை மாட்டவே, தலைகுப்புற கீழே விழுந்துள்ளான். இதை கவனிக்காமல் அவசர அவசரமாக டிரைவர் வேனை ஸ்டார்ட் செய்யவே, கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தான். உடனடியாக, வேன் டிரைவர் அங்கிருந்து இறங்கி ஓடிவிட்டார். 

உரிய நடவடிக்கை கோரி சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளை, ஜூன் 3ம் தேதி திறக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட தனியார் பள்ளி  மட்டும் முன்கூட்டியே 1ம் தேதி பள்ளியை திறந்துள்ளது. இது அரசு விதிமுறையை மீறிய செயல் என்பதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.