காருக்குள் 2 வயது பெண் குழந்தை தொட்ட ஒரே ஒரு ஸ்விட்ச்! துடிதுடித்து பலியான இளம் தாய்! பதற வைக்கும் சம்பவம்!

லண்டன்: குழந்தை செய்த தவறால், தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்தை சேர்ந்தவர் யூலியா ஷர்கோ. இளம் வயது பெண்ணான இவர் ஆர்தர் என்பவரை  சில ஆண்டுகள் முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஆகஸ்டு மாதம் 31ம் தேதியன்று தனது 21வது பிறந்த நாளை யூலியா, தோழிகளுடன் சேர்ந்து கொண்டாடினார். பிறகு வீடு திரும்பிய அவர், காரை விட்டு இறங்கியுள்ளார். காரின் முன் இருக்கையில் குழந்தை இருந்துள்ளது. அதனை டிரைவர் சீட்டில் இருந்தபடியே எடுக்காமல், கீழே இறங்கி சுற்றி வந்து செல்லமாக, யூலியா வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

அதாவது ஜன்னலை திறந்து, அதன் வழியே தலையை விட்டு, குழந்தையை அவர் வெளியே எடுக்க முயன்றுள்ளார். அப்போதுதான், அந்த விபரீதம் நிகழ்ந்தது. ஆம், குழந்தை எதேச்சையாக, ஜன்னல் சாத்தும் பட்டனை அழுத்திவிட, ஜன்னல் மேலே எழ, யூலியாவின் கழுத்து மாட்டிக் கொண்டது. இதில், அவர் மூர்ச்சையாகி விழுந்தார்.

இந்த சத்தம் கேட்டு, யூலியாவின் கணவர் ஆர்தர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்து அதிர்ந்து போனார். பிறகு, உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், ஒருவாரம் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் பலனின்றி பரிதாபமாக யூலியா உயிரிழந்தார்.  

இச்சம்பவம் பச்சிளம் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் அனைவருக்கும் ஒரு தகுந்த முன்னெச்சரிக்கையாக உள்ளது என்றால் அது மிகையல்ல...