முதலமைச்சரின் மனைவியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை! வெளியானது திடுக் தகவல்!

முதலமைச்சர் மனைவி சட்டவிரோதமாக 2 வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா. இவரிடம் தான் சட்டவிரோதமாக இரு வாக்காளர் அட்டைகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல்  நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

பாஜக சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், கரோல் பாக் மற்றும் ராஜேந்திர நகர்ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்களிக்கும் வகையில் 2 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி அண்மையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.  

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மீது பாஜக அதிரடி புகாரை கூறியுள்ளது. அதன்படி   உத்தரபிரதேசத்தின் காசியாபாத் தொகுதி மற்றும் டெல்லி சாந்தினி சவுக் தொகுதி  எனஇரு வாக்காளர்கள் அட்டைகளை சுனிதா வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.