நான் ஆட்டோக்காரன்..! ஒரு நாள் ஆட்டோ டிரைவரான முதலமைச்சர் ஜெகன்! பிறகு நெகிழ வைத்த அறிவிப்பு!

ஆந்திராவில் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக ஆந்திரா முழுவதும் ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை நடத்தி மக்கள் படும் இன்னல்களை அறிந்து வந்தார். அப்போது கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் படும் அவதியை அவர்களிடம் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆட்சிக்கு வந்த பிறகு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தப்படும் என அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். 

அதேபோல, நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் ரூபாய் கார் மற்றும் ஆட்டோ வாடகைக்கு ஓட்டுபவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக மேடையில் இருந்தபடி, சுமார் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு வங்கிக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோ ஓட்டுனரை போல காக்கி உடை அணிந்து வந்திருந்த ஜெகன்மோகன் ரெட்டி அனைவரின் மனதையும் கொள்ளை அடித்திருக்கிறார்.