தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயலால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டனர். முகாம்களில் தங்கியிருந்த அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன.
வேட்டியை மடித்துக்கட்டி வெள்ளத்தில் இறங்கிய முதல்வர்… எடப்பாடி இருக்க கவலை எதற்கு..?

அதேநேரம் புயல் மற்றும் கன மழை காரணமாக கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்ட வயல்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், அணுக்கம்பட்டில் புயல் மற்றும் கன மழையால் வேளாண் நிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெள்ளம் மூழ்கிய வயல் வெளியில் விவசாயிகள் இருப்பதை அறிந்த முதல்வர் தானும் வேட்டியை மடித்துக்கட்டி வயிலில் இறங்கி, விவசாயிகளின் சோகங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி இருக்க அச்சம் எதற்கு என்பதுதான் விவசாயிகளின் எண்ணம்.