ஸ்டாலினுக்கு மரண பங்கம். அநியாயத்துக்கு ஸ்டாலினை கிண்டல் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்கள் திறந்து வைப்பதற்காக சேலத்திற்கு சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘’தமிழக அரசு வழங்கிய 7.5 % உள்ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசின் நடவடிக்கையினால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உள்ளனர். நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் கூடுதலாக 1,900 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தி

முக தலைவர் ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி நினைக்காவிட்டால் தூக்கம் வராது. தமிழகம் முதல் இடத்தில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அறையில் இருந்தவாறே அறிக்கைகளை விட்டு வருகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம். ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே அவர் செயல்படுகிறார். என்று கிண்டல் செய்துள்ளார்.