தி.மு.க.தான் நீட் மாணவர்கள் 13 பேர் தற்கொலைக்குக் காரணம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி

இரண்டாவது நாளாக தொடங்கிய சட்டமன்றத்தில், நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொண்டுவந்தார்.


அப்போது அவர், ’தமிழகச் சட்டமன்றத்தையும் - தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத - நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் மாண்புமிகு பியூஸ் கோயல் அவர்களைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் அவர், ‘பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணயாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’நீட் தேர்வு அச்சம் காரணமாக இதுவரை தற்கொலை செய்து கொண்ட 13 மாணவர்களின் மரணத்திற்கும் திமுகவே காரணம் என்று தெரிவித்து சட்டமன்றத்தை அலறவிட்டார்.

முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘’கடந்த 2010ம் ஆண்டு திமுக – காங்., மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வுக்கு அவசரச் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது நாட்டுக்கே தெரியும்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் ஆஜராகி வாதாடினார். அவர் ஆஜராகவில்லை என்றால் மறுப்பு தெரிவித்து பேசுங்கள். நாட்டையே குட்டிச் சுவர் ஆக்கியது தி.மு.க. கூட்டணி தான். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருப்பது தி.மு.க.தான்.

நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சனையாகக் காரணம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான். நீட் தேர்வுக்கு தடை வாங்கியது முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான். நீட் விவகாரத்தில் 13 பேர் மரணமடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம்’’ என்று ஆதாரபூர்வமாகப் பேசி அலறவிட்டார்.