என்றென்றும் மாணவர்களின் நண்பர்… அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கும் எடப்பாடி பழனிசாமி..!

10ம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதாமலே பாஸ் செய்ய வைத்தது, அரியர் மாணவர்களுக்கு பாஸ் கொடுத்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளால், மாணவர் மனதில் இடம்பிடித்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது வெற்றி மகுடத்தில், 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா விரைவில் இடம் பெறும் என்பது தெரியவந்துள்ளது.


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை நாடு நன்கறியும். மத்திய அரசிடம் கடிதம் மூலமாகவும், நேரிலும் இது தொடர்பாக முதலமைச்சரும், அமைச்சர்களும் பலமுறை வலியுறுத்தினார்கள். ஆனாலும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது நீட்.

மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் வசதியான வீட்டு பிள்ளைகளுடன் தமிழக பாடத்திட்டத்தில், அதிலும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி போட்டிபோட இயலும்? அப்படி போட்டியிடுவது சமநிலையற்ற போட்டியாகத்தானே இருக்கும்! என்கிற எண்ணம் எல்லோரது மனங்களிலும் இருந்தது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினார் முதல்வர் எடப்பாடி.

இதன்படி மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அதிரடியாக அறிவித்தது தமிழக அரசு.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர். இவை தவிர மத்திய அரசிடமும் முதல்வர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடுக்கு கவர்னரிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த இட ஒடுக்கீடு காரணமாக 300 முட் ஹல் 400 அரசு பள்ளி மாணவர்கள் நிச்சயம் மருத்துவர்களாக மாற முடியும். எனவே, எடப்பாடி பழனிசாமி மாணவர்களின் காவலர் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.