செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கூட்டணிக்கு யார் தலைமை என்ற கேள்வி சுளீர் பதில்!

கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் அ.தி.மு.க. தலைமையில் தான் பா.ஜ.க. இருந்தது. ஆனால், இப்போது தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் வந்ததில் இருந்தே மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தான், வரும் சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக தலைமையில் தான் கூட்டணி என வி.பி.துரைசாமி சொன்னார். அப்போதே அமைசர் ஜெயகுமார் இதுகுறித்து, ‘கூட்டணி குறித்து பேசுவதற்கு வி.பி.துரைசாமிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட திட்டப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். அப்போது, கூட்டணிக்கு யார் தலைமை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  

இந்த கேள்விக்கு முதல்வர், ‘இன்னும் சட்டமன்றத் தேர்தலே வரவில்லை. தேர்தல் வரும்போது கூட்டணிக்கு யார் தலைமை என்பது தெரிய வரும். கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிமுக மட்டுமல்ல திமுகவிலும் இன்னும் கூட்டணி குறித்தும் முடிவு செய்யப்படவில்லை” என்று சுளீரென பதில் கொடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே, சட்டமன்றத் தேர்தலிலும் தலைமையை அ.தி.மு.க. விட்டுக் கொடுக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.