சிதம்பரத்தை ஓரம்கட்டிய கார்த்தி!. சிவகெங்கையில் ஏமாந்த சுதர்சன நாச்சியப்பன்!

சிவகெங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் அல்லது ஸ்ரீநிதி சிதம்பரம் நிறுத்தப்படுவார் என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது.


இந்த நிலையில் திடீரென தமிழகத்தில் எட்டு தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த ராகுல், திடீரென சிவகெங்கை தொகுதியை மட்டும் விட்டுவைத்தார்.

இதனால் பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. ஒரு வீட்டுக்கு ஒரு பதவி என்ற கொள்கை காரணமாக ப.சிதம்பரம் ஏற்கெனவே ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பதால் அவரது குடும்பத்துக்கு சீட் கிடையாது என்று ராகுல் சொல்லிவிட்டதாக செய்தி பரவியது.

ஆனால், நமது தளத்தில் மட்டும்தான் சிவகெங்கை தொகுதியில் போட்டி அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கிறது என்பதை எழுதியிருந்தோம். ஏனென்றால் தமிழகத்தைப் பொறுத்தவரை சிதம்பரத்தை மீறி எந்த முடிவும் எடுக்க ராகுல் தயாராக இல்லை. 

தானும் மக்களவை எம்.பி.யாக விரும்பியதால்தால் சிதம்பரத்துக்கும் கார்த்திக்கும் இடையில் மோதல் நிலவிவந்தது. அதனால், நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுங்கள் என்று அந்தத் தொகுதியை மட்டும் அறிவிக்காமல் விட்டார் ராகுல்.

இப்போது ஒருவழியாக குடும்ப பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. மகனுக்கு வழிவிடுவதற்கு சிதம்பரம் தயாராகிவிட்டார். காங்கிரஸ் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், எப்படியாவது மீண்டும் ராஜ்யசபா பதவியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.

ஆக, சிவகெங்கையில் கார்த்தி இறங்கிவிட்டார்.  இருவருக்கும் இடையிலான சண்டையில் நமக்கு சீட் கிடைக்கும் என்று டெல்லியில் காத்திருந்த சுதர்சன நாச்சியப்பன் சென்னைக்குத் திரும்பிவிட்டார். இனிமே ஹெச். ராஜாவுக்கு செமத்தியான தீனி காத்திருக்கு…