யாருக்கும் நான் தீங்கு நினைத்தது இல்லை! நூலிழையில் வென்ற திருமா உருக்கம்!

நீண்ட இழுபறிக்கு பிறகு வென்ற திருமாவளவன் உருக்கத்துடன் பேட்டி அளித்துள்ளார்.


சிதம்பரத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, யாருக்கும் நான் தீங்கு நினைத்ததில்லை. கடும் போட்டிக்கிடையே இந்த வெற்றியை பெற்றுள்ளேன். இந்த வெற்றியை தொகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தமிழகத்தில் சாதி வெறி, மத வெறி சக்திகளுக்கு இடமில்லை என மக்கள் நிரூபித்துள்ளனர். அகில இந்திய அளவில் மோடி வெற்றி பெற்றாலும் தமிழகம், கேரளாவில் அவர்கள் ஜம்பம் பலிக்கவில்லை

என்றைக்கும் தமிழ் மண்ணில் சாதிவெறி, மதவெறிக்கு இடமில்லை என தமிழக மக்கள் நிரூபித்திருக்கின்றனர். அங்குலம் அங்குலமாக இந்த வெற்றியை ஈட்டி இருக்கிறோம் 

சனாதன ஜாதிவெறி சக்திகள் என்னை தோற்கடிக்க 100 கோடிகளுக்கு மேல் செலவு செய்தார்கள். அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி இந்த வெற்றியை அனைவரும் ஈட்டித் தந்து இருக்கிறார்கள்.

இவ்வாறு திருமாவளவன் பேட்டியளித்தார்.