கொரோனா ஊரடங்கு..! சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் வலம் வரும் மிகப்பெரிய சிறுத்தை..! எங்கு தெரியுமா?

சண்டிகாரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து உள்ளனர்.


சண்டிகார் நகரில் உள்ள செக்டார் 5 குடியிருப்பு பகுதியில் சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று கடந்த சில நாட்களாக நடமாடி வருகிறது. இதனை சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலமாகவும், நேரில் பார்த்தவர்கள் மூலமாகவும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.  

ஆனால், அது சிறுத்தையாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே நடமாட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். செக்டார் 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றின் உள்ளேயே சிறுத்தை நுழைந்துவிட்டு, வெளியேறியிருக்கிறது.  

எனவே, பொதுமக்களும் பீதியில் உறைந்துள்ளனர். அதேசமயம், இதனை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் போலீசாரும், வனவிலங்கு ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு நிகழும் முன்பாக, சிறுத்தையை பிடித்துவிட வேண்டும் என்று, போலீசார் குறிப்பிடுகின்றனர்.