சேத்துப்பட்டு இரயில் நிலையத்தில் நேற்று இரவு நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலர்கள், திட்டமிட்டு காதலியை வெட்டி சாய்த்து விட்டு பின்னர் தானும் இரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதியை காரணம் காட்டி கழட்டிவிட்ட காதலி! வாயிலேயே வெட்டிய காதலன்! ரயில் நிலைய சம்பவம்!

ஈரோடு மாவட்டம் களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி இவரது மகள், தேன்மொழி(வயது 26) பட்டதாரியான இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்துள்ளார்.
எழும்பூர் விடுதியில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்.ஈரோடு சேர்ந்த விஜய ராகவன் மகன் சுரேந்தர் (வயது27) ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் ஏற்பட்டு பழகி வந்த நிலையில், சுரேந்தர் தனது நண்பர்களுடன் தேன்மொழி வீட்டுக்கு சென்று சினிமா பாணியில் பெண் கேட்க ஜாதியை காரணம் காட்டி தேன்மொழி அப்பா அவரை திட்டி அனுப்பியுள்ளார்.
இதனால் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த சுரேந்தரிடம் தேன்மொழி பெற்றோர் பேச்சைக்கேட்டு பேசாமல் போக இன்னும் மன ரீதியாக பாதிக்கபட்டவர், பல முறை தேன்மொழியை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார், இதில் கடைசியாக தனது நிலையை விவரிக்க நினைத்த தேன்மொழி சேப்பாக்கம் இரயில் நிலையத்தில் அவரை பார்க்க முடிவு செய்தார். இதன்படி வீட்டில் நண்பர் திருமணத்திற்கு செல்வதாக சொல்லி விட்டு சென்ற சுரேந்தர் ஏற்கனவே இரயில் நிலையத்தில் காத்திருக்க, நேற்று மாலை 6 மணியளவில் பணியை முடித்து விட்டு வந்த தேன்மொழி இருவரும் பேச துவங்கி, சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி ஒளித்து வைத்திருந்த அரிவாளை கொண்டு தேன்மொழியை சரமாரியாக சுரேந்தர் தாக்கினார். இதில் கழுத்து மற்றும் தாடை பகுதியில் கடுமையாக வெட்டு வாங்கிய தேன்மொழி இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனை அடுத்து, அங்கு வந்த இரயில் முன் பாய்ந்த சுரேந்தர், தலையில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும், மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் கண் விழித்த தேன் மொழி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் மேற்கண்ட தகவல்கள் கொடுக்கபட்டது.மேலும் காதலன் சுரேந்தர் இன்னும் ஆபத்தான நிலையை தாண்டவில்லை.
இதுகுறித்து இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.ஏற்கனவே பொறியாளர் சுவாதி இதே பாணியில் வெட்டி கொலை செய்யபட்ட நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது கேட்போரை பதைக்க செய்கிறது. அதே சமயம் முதலில் காதலித்து விட்டு பிறகு பெற்றோர் பேச்சை கேட்டு காதலனை கழட்டிவிட்டதே இந்த பிரச்சனைக்கு காரணமாகியுள்ளது.