மார்பகங்களில் தாங்க முடியாத வலி..! வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பேராபத்து! ஆனாலும் இளம் பெண் எடுத்த துணிச்சல் முடிவு! நெகிழ்ச்சி சம்பவம்!

கலிஃபோர்னியா: ஒருபக்கம் புற்றுநோய் சிகிச்சை செய்தபடியே மறுபுறம் போராடி குழந்தை பெற்றெடுத்த சாதனைப் பெண் பற்றிய செய்திதான் இது.


கலிஃபோர்னியாவில் உள்ள குகாமாங்கோ பகுதியை சேர்ந்தவர் ஜேட் டெவிஸ். 36 வயதாகும் இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே, டெவிஸ் கர்ப்பம் தரித்துள்ளார். புற்றுநோய் உள்ள நிலையில், கருவை கலைத்துவிடும்படி மருத்துவர்கள், உறவினர்கள் எச்சரித்தும் டெவிஸ் கேட்கவில்லை.

தன்னம்பிக்கையுடன் கருவை தொடர்ந்து வளர்த்து வந்த டெவிஸ், தனது கீமோதெரபி சிகிச்சையை மட்டும் சற்று ஒத்தி வைக்கும்படி மருத்துவர்களை கோரியுள்ளார். இதன்படி, மார்பக புற்றுநோய்க்கான இதர சிகிச்சைகள் அவருக்கு தரப்பட்ட நிலையில், கீமோதெரபி நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இத்தகைய வித்தியாசமான சூழலில், தற்போது டெவிஸ்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ஆனந்த கண்ணீருடன் உச்சி முகர்ந்து, முத்தம் கொடுத்த டெவிஸ், இனி செத்தாலும் கவலையில்லை, கீமோதெரபி சிகிச்சையை தன்னம்பிக்கையுடன் சந்திக்க தயார், எனக் குறிப்பிட்டுள்ளார்.  

குழந்தைக்காக, தனது புற்றுநோய் சிகிச்சையை தள்ளிப் போட்ட டெவிஸின் தன்னம்பிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்...