காரைக்குடி காளை அணியை கதற வைத்து வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை அபாரமாக வென்றுள்ளது.


கௌஷிக் காந்தி தலைமையிலான சேனை சூப்பர் கில்லிஸ் அணியும், ஸ்ரீகாந்த் அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியும் நேற்று tnpl தொடரில் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணியின் கோபிநாத் அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய காரைக்குடி காளை அணி, சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தார். இதனால் காரைக்குடி காளை  அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை அபாரமாக வென்றது.