மாஸ் காட்டிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்! மண்ணை கவ்வியது திருச்சி வாரியர்ஸ்!

இன்றைய tnpl போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹரிஷ் குமார் அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சரவன் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் அலெக்சாண்டர் 5 விக்கெட்களை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணயின் வெற்றிக்கு வழிவகுத்தார்.