சென்னையில் பயங்கரம்! அப்படியே இடிந்து விழுந்த வீட்டின் மேல் தளம்! மண்ணோடு மண்ணாக புதைந்த தாய், மகள்!

சென்னையில், வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில், தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் உள்ள வெங்கடேசபுரம் கால்வாய் ரோட்டில் வசிப்பவர் வெங்டேசன் (35). இவரது மனைவி சங்கீதா (31), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (4). தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கடேசன், இங்கு, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு (மார்ச் 5) சாப்பிட்டுவிட்டு, வெங்கடேசன் குடும்பத்தினர் படுத்து உறங்கியுள்ளனர். அவர்கள் இருந்த வீடு பழைய கட்டிடம் எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், நள்ளிரவு திடீரென வீட்டின் மேல் தளம் இடிந்து, வெங்கடேசன் குடும்பத்தினர் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில், நிகழ்விடத்திலேயே வெங்கடேசனின் மனைவி சங்கீதா உயிரிழந்துவிட்டார். பெண் குழந்தை யுவஸ்ரீயும், மருத்துவமனை
கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெங்கடேசனும், மகனும் உயிர் தப்பியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.