சொந்த வீட்டை விற்று தெரு நாய்களுக்கு சரணாலயம்! சென்னையின் விசித்திர இளைஞர்!

சென்னையில் நாய்கள் உள்ளிட்ட ஆதரவற்ற விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து சேவையாற்றும் 18 வயது இளைஞர் அவற்றை பராமரிக்கும் இல்லம் கட்ட தனது குடும்ப வீட்டையும் விற்கத் தயாராகி வருகிறார்.


சாய்விக்னேஷ் என்ற இளைஞருக்கு 7 வயதாக இருந்த போது அவர் வளர்த்து வந்த 5 வயது நாயான பைரவா இறந்துபோனது. அதன் பிறகு வேறு செல்லப் பிராணியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை என்ற போதும், தெருவில் ஆதரவின்றிச் சுற்றும் நாய்களின் மீது அக்கறை காட்டத் தொடங்கினார். 

நோய்வாய்ப்படும் நாய்கள், பறவைகளை மீட்டு சிகிச்சை அளிப்பது, உணவளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார். 

அதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக கருதாமல் ஆதரவற்றா விலங்குகளுக்கு ஒரு ஆதரவில்லம் கட்டுவது சாய் விக்னேஷின் லட்சியமாக மாறியது. இந்நிலையில் ஆதரவற்ற விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பாக சாய் விக்னேஷ் நடத்திய நிகழ்ச்சிய்யின் போது அறிமுகமான தனியார் நிறுவன ஊழியரும் விலங்குகள் ஆர்வலருமான சிவமணி என்பவர் விலங்குகள் சரணாலயம் கட்ட திருவள்ளூஉரில் உள்ள தனது எட்டறை ஏக்கர் நிலத்தை மனமுவந்து அளித்தார். 

இதில் விலங்குகள் சரணாலயம் தான் உருவாக்கிய ஆல்மைட்டி அனிமல் கேர் டிரஸ்ட் மூலம் பணம் வசூலித்து கட்டிடம் கட்டும் வேலைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு இவரது தாத்தா மாதம் தோறும் தனக்கு வரும் 35 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலியில் சாய்விக்னேஷ் குடும்பத்துக்குசொந்தமான விட்டை விற்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.