பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டரின் பேரன் விபத்தில் மரணம்..! பிறந்த நாளில் உயிர் விட்ட பரிதாபம்.

சென்னையில் பிறந்தநாளன்றே விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் கண்கள் தானமாக வழங்கப்ட்ட உருக்கமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.


குடியாத்தத்தை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரின் மகன் சரவணன் காட்பாடியில் உள்ள கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். கடந்த 17ம் தேதி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார் சரவணன். பெட்ரோல் வாங்குவதற்காக கோயம்பேடு அங்காடிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவருடை பைக் மீது அரசுப் பேருந்து மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சரவணன் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பெற்றோர் சரவணன் உடலை பார்த்து கதறி அழுதனர். 17 வயது முடிந்து 18வ ஆண்டின் பிறந்த நாள் கொண்டாடிய அன்றே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சோகத்திலும் தங்களை சுதாரித்துக் கொண்ட பெற்றோர் அவரது கண்களை தானமாக பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவருடைய கண்களை பெற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பின்னர் உடற்கூறு ஆய்வு செய்து உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தது. சரவணன் பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் பேரன் ஆவார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன்னுடைய கண்களை பிறருக்கு தானமாக வழங்கியதன் மூலம் இறந்தபிறகும் இன்னும் சில நாட்களில் உலகை காண்பார் சரவணன் என்பதில் ஐயமில்லை.