சென்னையில் கணவர் இறந்துவிட்டதால் வேதனையில் இருந்து வந்த மனைவி 2 மகள்களை அனாதையாக தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செயது கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் சண்முகம

சென்னையில் கணவர் இறந்துவிட்டதால் வேதனையில் இருந்து வந்த மனைவி 2 மகள்களை அனாதையாக தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செயது கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ராஜேஸ்வரி என்கிற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர்.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சண்முகத்திற்கு காரியம் நிகழ்ச்சி நடைபெற்றது. காரிய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உறவினர்கள் கணவரை இழந்து வாடும் ராஜேஸ்வரிக்கும் அவரது குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறி விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் கணவர் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த ராஜேஸ்வரி 2 பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் வேதனை அடைந்து வந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தாரிடம் அடிக்க அடி சொல்லி வேதனையை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் 2 நாட்கள் முன்னர் இரண்டு மகன்களுக்கு உணவு கொடுத்து விட்டு தூங்க வைத்துள்ளார். மகன்கள் தூங்கியபின் நீண்ட நேரம் உறங்காமல் இருந்த ராஜேஸ்வரி எதிர்காலத்தை நினைத்து விரக்தியில் இருந்துள்ளார். பின்னர மனஅழுத்தம் அதிகரிக்க தனது அறைக்கு சென்று தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் குழந்தைகள் தூங்கி எழுந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். தாய் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். அவர்கள் அழுவதை கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் இரு மகன்களையும் அனாதைகளாக பரிதவிக்கவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.