தந்தையின் கண் முன்னே லாரி டயரில் சிக்கிய 1 வயது குழந்தை! கதறிய தாய்! நெஞ்சை உறைய வைக்கும் விபத்து!

சென்னை பல்லாவரம் அருகே இருசக்கர வாகனத்தில் தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயற்சிக்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற 1 வயது குழந்தை லாரியின் சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் நோக்கி தண்ணீர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. இன்னிலையில் அதை ரோட்டில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதையடுத்து சிறிது தூரம் சென்ற பிறகு ராஜா தண்ணீர் லாரியை முந்தி செல்வதற்காக வலப்புறம் சென்றுள்ளார்.

இந்நிலையில் தண்ணீர் லாரி ஓட்டுனர் திடீரென லாரி வலப்பக்கம் வளைத்ததால் லாரி இருசக்கர வாகனத்தின் மோதியது இந்நிலையில் தடுமாற்றம் அடைந்த ராஜா திடீரென வாகனத்தை கீழே போட்டுள்ளார். இந்நிலையில் அவரது 1 வயது குழந்தை லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில்  மற்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து அருகில் உள்ளவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனே காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனே வந்து லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.மற்றும் விசாரணையில் லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்து உள்ளதாக தெரிகிறது. இதனால் பின்னே வந்த வாகனம் ஒலி எழுப்பும் போது அவருக்கு கேட்கவில்லை என லாரி ஓட்டுநர் போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.