அந்த ஆசையை தூண்டும் ஹேப்பி பில்ஸ் டேப்லட்! மயங்கி கிடந்த டிவி தொகுப்பாளினி! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னையில் திடீரென மயக்கமடைந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்தத்தில் பாலியல் உணர்வை அதிகரிக்க கூடிய போதைப்பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.


சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் கடந்த வாரம் திடீரென அரை மயக்க நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொகுப்பாளினியின் இரத்தத்தில் காம உணர்ச்சியை அதிக அளவில் தூண்டக்கூடிய போதைப்பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த போதை பொருளின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால்தான் அப்பெண் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். போதைப்பொருளின் மாதிரியை வைத்து மருத்துவர்கள் இது ஹேப்பி பில்ஸ், எனவும் கண்டறிந்துள்ளனர்.  

இந்நிலையில் சந்தையில் இந்த போதைப்பொருள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதை கல்லூரி பெண்கள், திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் பெண்கள் தான் மற்றும் அவர்கள் அதிக அளவில் திரைப்பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை கவர்ந்து அவர்களிடம் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருளை விற்பனை செய்யும் நபர்கள் முதலில் அதை யாருக்கும் விற்பனை செய்யப் போகிறோம் என முடிவெடுத்து விடுவார்களாம். அவர்களிடம் முதலில் சிறிய அளவு மட்டுமே கொடுத்து அவர்களை அந்த போதை பொருளுக்கு அடிமையாக்கி பிறகு ஒரு பெரிய தொகைக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.