இதுவரை 70 பெண்கள்! வீடியோவும் எடுத்துள்ளேன்! போலீசையே மிரள வைத்த கொள்ளையனின் வாக்குமூலம்! சென்னை திக் திக்!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த சுமார் 70 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கும் கொள்ளையன் நகை பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது


சென்னை அம்பத்தூர் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பணம் நகைகளை கொள்ளை அடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன அது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர் இந்நிலையில் அந்த நபர் கொள்ளையடிக்க செல்லும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் வந்தது.

இதையடுத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்நிலையில் இந்தப் பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு இளைஞனை தடுத்து நிறுத்தினர். அப்போது அவனிடம் வாகனத்துக்கான எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் முறையாக எதற்கும் பதில் அளிக்காததை எடுத்து அவன் மீது சந்தேகம் வலுத்தது. அவனது செல்போனை வாங்கி போலீசார்  ஆய்வு செய்தபோது அதில் 70க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார வீடியோக்கள் இருந்தன. அனைத்திலும் அவனே இருந்ததால் போலீசார் அவனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அம்பத்தூர் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த கொள்ளையன் அவன் தான் என தெரிய வந்தது. இதையடுத்து அவனை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தபோது அதிர்ச்சி அளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தன வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் அவன் கதவை தட்டியதும் வந்து திறக்கும் பெண்களை அப்படியே உள்ளே தள்ளி வீட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதை ஒப்புக் கொண்டான்.

மேலும் அவர்களிடமிருந்து நகை பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்ற அதையும் அவன் ஒப்புக்கொண்டான். இந்த வீடியோக்களை அவ்வப்போது பார்த்து ரசித்து வந்ததாகவும் இந்த வீடியோக்களை கொண்டு சில பெண்களை மிரட்டி அவர்களிடம் மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அவன் ஒப்புக்கொண்டான்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்ற அந்த நபர் பெங்களூரில் மின் பொறியாளராக பணியாற்றியதாகவும் அப்போது ஓசூரில் பல பெண்களுடன் இதே போன்று நடந்து கொண்டு தப்பி வந்ததும் தெரியவந்தது சென்னையில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடி அதன் மூலம் வீடுகளை நோட்டம் விட்டு அதன் மூலம் கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரச் சம்பவங்களை அரங்கேற்றி வந்ததும் தெரிய வந்தது.

வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் அவன் இதே போன்று நடந்து கொண்டதும் ஒரு இடத்தில் அவன் கொள்ளையில் ஈடுபட்ட போது அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியதும் தெரியவந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக ஒரு பெண் புகார் அளித்த நிலையிலும் அதனை சைதாப்பேட்டை போலீசார் முறையாக விசாரிக்காததால் அவர் ஜாமீனில் வெளி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவனுக்கு இரண்டு வழக்கறிஞர்கள் துணையாக இருப்பதாகவும் அவர்கள் அவனை ஜாமினில் எடுத்துவிடுவதால் அவன் கொள்ளையில் அவர்களுக்கு பங்கு கொடுப்பதும் தெரியவந்தது வசமாக சிக்கிக் கொண்ட காமுக கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்