காலை 10 To மாலை 6 மணி..! காதலர்களுக்கு திறந்தவெளி படுக்கையறை ஆகும் வண்டலூர் பூங்கா!

சென்னையை அடுத்த வண்டலூரில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஜோடியாக வரும் காதலர்கள் அத்துமீறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள், நீர்யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீளவால் குரங்கு, மனித குரங்கு, புள்ளிமான், கரடி, செந்நாய், வரி குதிரை, ஒட்டக சிவிங்கி ஆகியவை சிறுவர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இங்கு வரும் காதலர்கள் அத்துமீறும் வேலையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். காதல் ஜோடிகள் பூங்காவில் உள்ள மறைவான இடங்கள், புதர்களில் உட்கார்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும், சிலர் வெளிப்படையான இடத்திலேயே சில்மிஷத்தில் ஈடுபடுட்டு முகம் சுளிக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இதுபற்றி பூங்கா அதிகாரிகள் தெரிவித்தபோது அவ்வப்போது இதுபோன்று அத்துமீறும் ஜோடிகளை வெளியில் அனுப்பி விடுவதாகவும், பொதுவாக ஜோடியாக வருபவர்களை அனுமதிப்பது இல்லை என்றும் தெரிவித்தனர். ஆனால் குடும்பமாக வருபவர்களிடம் சென்று கெஞ்சி கூத்தாடி, அவர்களுடன் வருவது போல் பூங்காவுக்குள் நுழைந்து விட்டு பின்னர் மறைவிடம் தேடி செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல காதல் ஜோடிகள் காலை 10 மணிக்கு வந்து மாலை 6 மணிவரை பூங்காவிலேயே மறைவான பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.