குளுகுளு ஏசி! 13 நாட்கள்! சென்னை டூ நேபாளம்! அசர வைக்கும் வசதிகளுடன் ரயில் சுற்றுலா! கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள பக்தி தளங்களுக்கு செல்ல 13 நாட்கள் சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது ஐஆர்டிசி நிறுவனம். பயணிகள் குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் பயணம் செய்து திவ்ய தேசங்களுக்கு செல்லலாம்.


அக்டோபர் மாதம் 19ம் தேதி திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் பெங்களூரு வழியாக உத்தர பிரதேச மாநிலம் செல்கிறது. அங்கு முக்கிய கோயில்களில் தரிசனம் முடிந்தபின், நேபாளத்தில் முக்திநாத், கஜேந்திர மோட்ச சாளக்கிராம மூர்த்தி தலம், போக்ரா பிந்து பாஷிணி ஆலயம், மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம், காட்மாண்டு தர்பார் சதுக்கம், பசுபதிநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மற்றொரு பிரிவு சுற்றுலாவான தி குளோரி கிங்டம்மில் லக்னோவை சுற்றிப் பார்த்தல், புத்தர் பிறந்த இடமான லும்பினி, போக்ரா பிந்துபாஷிணி ஆலயம், மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவு ஆலயம், காட்மாண்டு தர்பார் சதுக்கம், பசுபதிநாதர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.சி.ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரில் பயணிக்கக்கூடிய வாகன வாடகை, தங்கும் அறை, போக்ரா விமானக் கட்டணம் உள்ளிட்ட வசதிகள் அடங்கும் என ஐஆர்டிசி தெரிவித்துள்ளது.

பொதுவாக நாம் சுற்றுலா செல்லும்போது எங்கு எப்படி செல்லவேண்டும் என நமக்குத் தெரியாது. பாஷை தெரியாத இடத்தில் சென்று அவதிப்படுவதை விட இதுபோன்று நிறுனங்கள் ஏற்பாடு செய்யும் ரயிலில் சென்றால் அவர்களே அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவார்கள்.