படியில் பயணம்! நொடியில் மரணம்! ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய 9ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்! சென்னை பரபரப்பு!

தி.நகர் பேருந்து நிலையத்தினுள் பள்ளி மாணவன் ஒருவன் பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சரண். இவன் தி நகர் அருகே உள்ள ராமகிருஷ்ணா மிஷன் எனும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  

தினமும் அரசு பேருந்தில் பயணித்து வரும் சரண் இன்று காலை வேளச்சேரியில் இருந்து தி நகர் நோக்கி வந்த பேருந்தில் பயணித்து வந்துள்ளான். 

பேருந்து தி நகர் பேருந்து நிலையத்திற்குள் சென்ற போது மாணவர்கள் பலர் பேருந்தின் படிக்கட்டில் இருந்து குதித்துள்ளனர். அதேபோல் சரண் படிக்கட்டில் இருந்து குதித்துள்ளான். நிலை தடுமாறிய சரண் கீழே விழுந்தபோது துரதிஸ்டவசமாக பேருந்தின் சக்கரம் சரண் மீது ஏறிச் சென்றது.  

இதனால் சரண் சம்பவ இடத்திலேயே சரண் உயிரிழந்துள்ளான். இதை கண்ட மற்ற பயணிகள் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் தி நகர் பேருந்து நிலையத்தில் காலை 8.30 மணி அளவில் நேர்ந்துள்ளது. 

இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவனின் உடலை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சென்றனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பலமுறை நடத்துனர்களுக்கு படிக்கட்டில் பயணிக்க பயணிகளை அனுமதிக்காதீர்கள் என அறிவுரை கூறிய போதும் அது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.