நேற்று இரவு சென்னை கடற்கரையில் அலைகள் வரும்போது, நீல நிற வெளிச்சம் தென்பட்டதாக பேச்சு உலவியது. அதனால், கடற்கரை நோக்கி படையெடுத்தார்கள். மெரினா, சாந்தோம் போன்ற கடற்கரைகளில் அப்படியெதுவும் தெரியவில்லை.
சென்னை கடல் நேற்று மின்னியது எப்படி? பாசியின் தன்மைதானா?

ஆனால், திருவான்மியூர் தாண்டிய கடலில் வெளிச்சம் மின்னியதாக சொல்லப்பட்டது. இது என்னவென்று ஊரூர் குப்பத்திலுள்ள மூத்த மீனவர் பாளையம் தெரிவித்திருக்கும் தகவல் இது.
"கடலில் வண்டத்தண்ணி வரும் நேரத்தில், இதை போன்ற நிகழ்வுகள் காணலாம். இதை நாங்கள் கமரு என்போம். இது வந்தாலே, வெளிச்சத்தை தேடி மீன்கள் கரையை நோக்கி வரும். கடலில் கமரு எப்போவும் இருக்கும். இன்று நம்ம கடற்கரையில அவ்வளோ இல்லை. வண்டத்தண்ணினா கலங்கலான தண்ணி. தன்னிலை நீரோட்டத்தினால் மாசு களைந்து செல்லாமல் கரையோரமாக ஒதுங்கும் போது இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக காணலாம்."
உயிரொளிர்வு கடலில் பல உயிரினங்கள் (பாசி, மீன், கடமா) பயன் படுத்தக்கூடிய ஒரு தொடர்பு முறை. ஒரு சில கோலா வகைகளிலும் செவுள் பக்கத்தில் உயிரொளிர்வு கொண்ட பூச்சி ஒன்றிருக்கும். அது மீன் வாழும் வரை வாழும். மீன் சாகும் பொது, அதுவும் செத்துவிடும்.
பாளையம் உயிரொளிர்வு தன்மை கொண்ட பாசி அலைகளின் கிளர்ச்சியின்போது லூசிபரின் என்ற மூலக்கூறு பயன்படுத்தி ஒளி உருவாக்குகின்றன. கடலலைகளில் இது போன்ற பாசி எப்போவும் இருந்தாலும், அதின் அளவு அதிகமாகும் போது தான் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது.
கோவலமிலிருந்து திருவான்மியூர் வரை கணிசமாக காணப்பட்ட இந்நிகழ்வின் வீரியம் பெசன்ட் நகர் ஊரூர் குப்பதின் கடற்கரையில் ஏன் குறைவாக இருந்ததாம்?
"நீரோட்டம் தெண்டி கரைசல் நீரோட்டம் -- அதாவது தெற்கிலிருந்து வடக்கை நோக்கி ஓடும் நீரோட்டம். நிலா உதிக்கும் நேரம் இரவு சுமார் 9 மணி அளவில். கடல் பாஞ்சு வத்த ஆரம்பித்து சில மணி நேரம் கடந்துவிட்டது. பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் அடையாறு முகத்துவாரத்தின் அருகே இருப்பதால், கரையொட்டி இருக்கும் நீரோட்டம் ஆறிலிருந்து வத்தி வரும் நீரினால் வடகிழக்கை நோக்கி செல்வதற்கான வாய்ப்புள்ளது.
வண்டைத்தண்ணியும் கரையை ஒட்டி ஓடாமல், கொஞ்சம் நீர்த்து போய்விடும். அதனால் அதில் உள்ள கமரு குறைவாக இருக்கும். முகத்துவாரம் அருகில் வண்டல் அதிகமாக இருப்பதால், அங்க கமரு பேய் மாதிரி காட்சி அளிக்கும்," என்கிறார் பாளையம்.
இயற்கையின் அதிசயம்தான்.