என் கணவன் என்னை ரேப் செய்துவிட்டார்..! போலீஸ் ஸ்டேசன் சென்று கதறிய தமிழ் நடிகை! சென்னை பரபரப்பு!

கணவர் வீட்டில் அடைத்து வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக நடிகை ஒருவர் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


சென்னை செனாய் நகர் பகுதியில் வசித்து வரும் 39 வயதான பெண் ஒருவர் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளதால் வசித்து வரும் பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.  

இவருக்கு சரவணன் என்ற ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சரவணன் நடவடிக்கை நாளுக்கு நாள் சரி இல்லை. குடித்து விட்டு வந்து வீட்டில் குழந்தைகள் மற்றும் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக அவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். 

நடிகை அளித்த புகாரில், குடித்துவிட்டு வந்து அவரது நண்பர்கள் முன்னிலையில் என்னை நடனமாட சொல்கிறார். மேலும் வீட்டில் அடைத்து வைத்து உடலுறவில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக அவ்வபோது மிரட்டுகிறார்.  

25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 100 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு திரும்ப கேட்டதற்கு ஆள் வைத்து மிரட்டுகிறார். நேற்றைய தினம் எனது மூத்த மகனை ஆள் வைத்து அடித்து மிரட்டியிருக்கிறார்.  

இதுமட்டுமல்லாமல் சரவணனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் ஆனது. அதனை மறைத்து என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்." என திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்த நடிகை புகார் அளித்திருக்கிறார். 

புகார் அளிக்க வந்தபோது அவரது உடம்பு ஆங்காங்கே காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் தலைமறைவான சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அவரது வீட்டிற்கும் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.