அடுக்குமாடி வீட்டிற்குள் ஆடையில்லாமல் நுழைந்த மர்ம நபர் செய்த நடுங்க வைத்த செயல்! பீதியில் போலீஸ்!

அப்பார்ட்மெண்டிற்க்குள் புகுந்து கார் கண்ணாடிகளை தாக்கிய மர்ம நபரை பிடித்து விசாரித்த போலீஸ் அதிகாரியின் கட்டை விரலை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தி நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றிர்க்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்குள்ள கார் கண்ணாடிகளையும் வீட்டின் ஜன்னல்களையும் கற்களால் தாக்கி உள்ளார். இதைக்கண்ட அப்பார்ட்மெண்ட் காவலாளி உடனடியாக மர்ம நபரை பிடிக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனை அறிந்த காவல்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த மர்ம நபரை பிடித்து அங்கேயே விசாரணை நடத்த முற்பட்டார். விசாரணை செய்து கொண்டிருக்கையில், திடீரென சுந்தரமூர்த்தியின் கட்டை விரலை அந்த மர்ம நபர் கடித்துக் குதறியுள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி அருகிலிருந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும் அந்த மர்ம நபரை மற்ற காவல்துறை அதிகாரிகள் கைகளை கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டதில், மர்மநபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பல்வாதுர் என்றும், மனைவி இறந்த பிறகு சென்னைக்கு பிழைக்க வந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இங்கு தங்கி சில நாட்கள் வேலை தேடி பார்த்து எந்த வேலையும் கிடைக்காததால் விரக்தியில் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.