மொட்டைமாடி! வெறும் 50 கோழிகள்! மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம்! அசத்தும் தம்பதி! எப்படி தெரியுமா?

சென்னையில் வீட்டிலேயே கோழி பண்ணை வைத்திருக்கும் ஒளிப்பதிவாளரின் மனைவி மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.


சினிமா ஒளிப்பதிவாளரான ராஜேந்திரன், ராஜேஸ்வரி தம்பதியினர் சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு மொட்டை மாடியில் குறைந்த முதலீட்டில் நாட்டு கோழிப்பண்ணை வைத்துள்ளனர். 

'காலம் மாறிப்போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்', 'பொறந்த வீடா புகுந்த வீடா' உட்பட தமிழ், தெலுங்கு சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராஜேந்திரன். விவசாயம் மீதான ஆர்வத்தில் சினிமாவிலிருந்து விலகி தொலைக்காட்சியில் பாரம்பர்ய சமையல் நிகழ்ச்சிகளை இயக்கி, தொகுத்து வழங்கி வருகிறார்.

'புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரை சேர்ந்த ராஜேந்திரனுக்க இயற்கை விவசாயம் மீது அதிக ஆர்வாம். படப்பிடிப்புக்காக கிராமங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார். ரசாயன விவசாயத்தின் தீமைகளைத் தெரிந்து கொண்ட ராஜேந்திரன் இயற்கை விவசாயக் காய்கறிகளையே வாங்கி சமைக்கிறார்.  

அதேபோல் ரசாயனம் கலந்த தீவனம் கொடுத்து வளர்க்கப்படுற கோழி, முட்டை எல்லாமே கெடுதல் என்பதால் நாட்டுக் கோழிகளை வளர்க்க முடிவு செய்து வீட்டு மொட்டை மாடியில் இடம் ஒதுக்கினார். தற்போது அந்த பண்ணையை ராஜேந்திரனை விட அவரது மனைவி ராஜேஸ்வரி மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறார். '800 சதுர அடி பரப்பளவுள்ள மொட்டைமாடியில் சராசரியாக 50 கோழிகள் எப்போதும் உள்ளது. தினமும் 20 முட்டைகள் கிடைக்கிறது. அதில் பாதியை விற்றுவிட்டு பாதியை குஞ்சுபொரிக்க வைத்துக்கொள்கிறார்கள்.  

அரிசி, கம்பு, சோளம், கோதுமை தவுடு, அசோலா மற்றும் வெங்காயத்தோல் உட்பட, வீட்டு காய்கறிக் கழிவுகள், மீதமாகும் உணவுகளையும் கோழிகளுக்குக் கொடுகிறார்கள். இதன் மூலம் செலவுகள் போக மாதம் 20 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக ராஜேந்திரன், ராஜேஸ்வரி தம்பதி தெரிவிக்கின்றனர்.