தஞ்சை ஆசிரியை செந்தமிழ்ச் செல்வி..! ஆசிரியர் அன்சார் அலி..! அகில இந்திய அளவில் பெற்ற மிகப்பெரிய அங்கீகாரம்! எதற்கு தெரியுமா?

சென்னை: வகுப்பறையில் ஜாதி பாகுபாட்டை ஒழிக்க போராடும் தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு, விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆம். தஞ்சாவூர் மாவட்டம், உடையாளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும்  அன்சார் அலி மற்றும் சரபோஜி மன்னர் அரசு காலேஜில் பிரின்சிபால் பணிபுரியும் செந்தமிழ் செல்வி ஆகியோரே இந்த பெருமையை பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும், தமது மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டின் கொடூரத்தை எடுத்துரைத்து, வகுப்பறையில் ஜாதி பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதை பாடம் நடத்தி, மாணவர்கள் மனதில் பதிய செய்துள்ளனர். இதற்காக, இவர்களுக்கு மணற்கேணி ரிசர்ச் ஜர்னல் சார்பாக, நிகரி விருது 2019 (Nikari Award 2019) அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஜாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றி மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தும்போதே எளிதான முறையில் புரிய வைத்துவிடுவதால், அவர்கள் வளர வளர ஜாதி பாகுபாடு பற்றிய சிந்தனையை கைவிட வழி ஏற்படுகிறது என்று, அன்சார் அலியும், செந்தமிழ் செல்வியும் கோரஸாகக் கூறுகின்றனர்...