திடீர் டர்ன் போட்ட டேங்கர் லாரி..! பிரேக் பிடிக்க முடியாமல் தடுமாறிய புல்லட்..! கால்களை துண்டாக இழந்த கல்லூரி மாணவன்!

சென்னை பல்லாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவரின் கால் துண்டானது.


சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் கல்லூரி மாணவர் சபியுல்லா புல்லட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்துஸ்தான் பெட்ரோல் பங்க் அருகே தண்ணீர் லாரி ஒன்று சாலையின் இடது புறம் திரும்பிக் கொண்டிருந்தது. லாரியின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த சபியுல்லா லாரி திரும்பும் என எதிர்பார்க்கவில்லை. எனவே உடனே பிரக் போட்டார்.

ஆனாலும் வேகமாக சென்ற புல்லட் லாரியின் மீது மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். இந்த விபத்தில் சபியுல்லா என்ற கல்லூரி மாணவரின் வலது கால் துண்டானது. இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சபியுல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . லாரியின் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மாணவ பருவத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உல்லாமல் வாகனங்கள் ஓட்டி வருகின்றனர். சில மாணவர்கள் அடுத்தவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் தருவது போல் வாகனங்கள் ஓட்டுகின்றனர். அவர்களுக்கு சாதாரண பைக்குகள் வாங்கித் தராமல் புல்லட் போன்ற அதிக எடை கொண்ட வாகனங்கள் வாங்கி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. விபத்து ஏற்படும்போது அந்த புல்லட்டே நம்மீது விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.