காதலனுக்கு இட்லியில் மயக்க மருந்து..! பிறகு அரங்கேறிய சம்பவம்..! ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்ததால் கார்த்திகா கோபம்!

சென்னை விநாயகபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கள்ளக் காதல்தான் காரணம் என போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.


பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் என்பவர் கடந்த 14-ம் தேதி மாயமான நிலையில் அக்டோபர் 18-ம் தேதி சுரேஷின் தாயார் கொரட்டூர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.  

இந்நிலையில் செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் முட்புதரில் சுரேஷின் உடல் தலையின்றி கண்டெடுக்கப்பட்து. இதையடுத்து சுரேஷை கொலை செய்தது ஜெயக்கொடி மற்றும் அவரது மனைவி கார்த்திகா என்பதை கண்டுபிடித்தனர்.

சுரேஷுக்கும் பாடியில் இட்லி கடை நடத்தி வரும் ஏற்கனவே திருமணம் ஆன கார்த்திகா என்பவருக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கள்ளக்காதலை நிறுத்த முயற்சி செய்த கார்த்திகா சுரேஷுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கடந்த 14-ம் தேதி இட்லி கடைக்கு சென்று கார்த்திகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வேறு ஒருவருடன் கார்த்திகா சிரித்து பேசுவதை பார்த்த சுரேஷ் மேலும் ஆத்திரம் அடைந்தார். இதுகுறித்து தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார் கார்த்திகா. பின்னர் கணவரின் ஐடியாப்படி மீண்டும் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார் சுரேஷ். பின்னர் மயக்க மருந்து கலந்த இட்லி சுரேஷை மயக்கமடைய செய்தனர். பின்னர் சுரேஷை நண்பர்கள் ராஜா, சுந்தரகண்டன் உதவியுடன் கொலை செய்து, உடல் வேறு, தலை வேறாக துண்டித்துள்ளனர் ஜெயக்கொடி-கார்த்திகா தம்பதியினர்.

உடலை முட்புதரில் போட்டுவிட்டு, தலையை வேறு பக்கம் வீசிவிட்டு வந்து விட்டனர். முட்புதரில் 2-வது நாளாக நடத்திய தேடுதல் வேட்டையில் சுரேஷின் தலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக் காதலி கார்த்திகா, கணவர் ஜெயக்கொடி, உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.