சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென புடவையை தூக்கிய லட்சுமி..! சந்தேகத்தில் சோதனை செய்தவர் பார்த்த அதிர்ச்சி காட்சி! சென்னை பரபரப்பு!

சென்னையில் பல சூப்பர் மார்க்கெட்டுகளில் புகுந்து ரகசியமாக பொருட்களை திருடிவந்த ஜோடி மாட்டிக் கொண்டதை அடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


ஜோடியாக கோயிலுக்கு செல்வதை பார்த்திருக்கிறோம். பார்க்கிற்கு, கடைக்கு, சினிமாவுக்கு செல்வதை எல்லாம் பார்த்திருக்கிறோம். ஜோடியாக சென்று திருடுபவர்களை பார்த்திருக்கிறீர்களா? இப்போது பார்ப்போம். 

சென்னையில் நாகப்பன் மற்றும் லட்சுமி என்ற பெயர்கள் கொண்ட இருவர் புதிதாக ஒரு தொழில் தொடங்கி அதில் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டனர். அதில் வருமானம் வந்தால் ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்வது. இவர்களது தொழில் பிரதான சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று சிறிய அளவிலான சென்ட் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை திருடி வெளியில் கொண்டு வந்து விற்று பணம் சம்பாதிப்பதுதான்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பததை கடைபிடித்து வந்தது இந்த ஜோடி. இவர்கள் எப்படி திருடுகிறார்கள்? இருவரும் ஒவ்வொரு கடைக்கும் கணவன், மனைவி போல ஜோடியாக செல்வது வழக்கம். பொருட்களை எடுப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூடையை எடுத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு பொருளாக அதில் போட்டுக் கொண்டே வருவார்கள். இதற்கிடையில் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிறிய அளவிலான சென்ட் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை டக்கென எடுத்து லட்சுமியின் தனது இடுப்பில் மறைத்து வைத்துள்ள பையில் போட்டுக் கொள்வார். பை நிரம்பியது அங்கிருந்து இருவரும் எஸ்கேப் ஆகிவிடுவர்.

இதேபோல் பூந்தமல்லியில் உள்ள சபிக் என்பவரது கடைக்குள் புகுந்து கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு பொருட்களை திருடி உள்ளனர். இதுகுறித்து ரபிக் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அதே கடையில் மீண்டும் திருடுவதற்காக இந்த ஜோடி நேற்று முன்தினம் வந்துள்ளது. இதை பார்த்து டென்ஷன் ஆன ஊழியர்கள் உடனே அவர்களை சுற்றி வளைத்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கணவன் மனைவி போல் நடித்து திருடியது தெரியவந்துள்ளது.