ஈடன் கார்டெனில் மாஸ் காட்டிய CSK! சின்ன தல ரெய்னா, ஜடேஜா அபாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் லின் சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். இவர் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்களை அடிக்கும் நிலையில் இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை  வேறு எந்த பேட்ஸ்மேனும் நிலையாக விளையாடி ரன்களை சேர்க்க தவறினர். மேலும் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி கொல்கத்தா அணியின் விக்கெட்களை சரித்தார்.தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

சென்னை அணியின் ஷார்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். கொல்கத்தா அணி கடைசி 4 ஓவரில் 19 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டு பிளெஸ்ஸிஸ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பொறுப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா  அவுட் ஆகாமல் 58 ரன்களை எடுத்தார். கடைசியில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 31 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வழிவகுத்தார்.இதனால் சென்னை அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஆகையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.