கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, படுக்கையில் வீழ்த்தி..! கேரள இளம் பெண்ணுக்கு சென்னை ஓட்டலில் விபரீத அனுபவம்!

சென்னையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பெண்ணை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பணிநிமித்தமாக கேரளாவில் இருந்து சென்னை வந்த பெண் அறை எடுத்து தங்கி உள்ளார். 

ஒரு அழகான இளம்பெண் தனியாக தங்கி இருப்பதை பார்த்த ஓட்டல் ஊழியருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் இருக்கும் அறையையே நோட்டமிட்டு அங்கேயே சுற்றி சுற்றி வந்தார். பின்னர் அந்த பெண் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த அந்த ஊழியர் அறையை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் சம்மதிக்க அறையை சுத்தம் செய்வது போல் பாவணை காட்டியுள்ளார். பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பெண் மீது பாய்ந்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். அறை தாழிட்டு இருந்ததால் அந்த பெண்ணின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை.

பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் ஒருவழியாக அவரிடம் இருந்து தப்பித்த அந்த பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பின்னர் ஓட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த தேனாம்பேட்டை மகளிர் காவல்நிலைய போலீசார் ஊழியரை விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர். அந்த ஊழியர் பெயர் மாணிக்கம் என்பதும், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.