எய்ட்ஸ் பாதித்த 45 குழந்தைகளுக்கு வரமாய் அமைந்த தந்தை
எய்ட்ஸ் நோயுடன் போராடும் 45 குழந்தைகள்! தத்தெடுத்து தந்தையான சாலமன் ராஜா! நெகிழ வைக்கும் சம்பவம்!

சென்னையில் எய்ட்ஸ் பாதித்து குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 45 குழந்தைகளை சமூக ஆர்வலர் ஒருவர் தத்தெடுத்துள்ளார். எய்ட்ஸ்...! சமூகத்தின் சாபக்கேட்டில் ஒன்றான முறைகேடான வாழ்க்கைக்கு இயற்கையின் தண்டனை. ஆனால் இதில் பாவத்தில் ஈடுபட்டவர்கள் மட்டும் சாபத்தைப் பெற்றால் அது பரிதாபத்துக்குரியது அல்ல.
ஆனால் எவரோ செய்த பாவத்துக்கு அவர்களுக்கு பிறந்ததால் மட்டுமே தண்டனையை அனுபவிக்கும் பிஞ்சுகள் இங்கு ஏராளம். அப்படிப்பட்ட 45 குழந்தைகளுக்கு கருணைக் கரம் நீட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சாலமன்ராஜ். சமூக ஆர்வலரான சாலமன்ராஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 45 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.
மற்றவர்களுடைய தவறினால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள் இவர்கள் எனத் தெரிவித்த இவர், அத்தகைய 45 குழந்தைகளுக்கு தான் தந்தையாகி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்தை பொறுப்பை ஏற்றுக்கொண்ட சாலமன் ராஜாவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது.
எனினும் தற்போது சாலமன் ராஜுக்கு முன் பிரம்மாண்டமாக இருப்பது அந்தக் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தான். அதற்கு சாலமன் ராஜுக்கு எவர் கைகொடுத்தாலும் அதுவும் மிகவும் மிகப் பெரிய புண்ணியமே.