தூங்கிக் கொண்டிருந்த போது மார்பகங்களில் யாரோ வருடுவது போல் இருந்தது..! மலைக்கோட்டை ரயிலில் இளம் கல்லூரி மாணவிக்கு விபரீத அனுபவம்!

சென்னை: ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜீனியர் கைது செய்யப்பட்டார்.


சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்ததால், வியாழனன்று இரவு மலைக்கோட்டை விரைவு ரயிலில் முன்பதிவு செய்து, தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

இவரது சீட்டுக்கு அருகே சிவகுமார் (40 வயது) என்பவரும் அமர்ந்திருந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவு நேரம் பார்த்து அந்த மாணவியை சிவகுமார் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதனை அவர் கண்டிக்கவே, உடனடியாக சிவக்குமார் ஆபாசமாக மாணவியை திட்டியுள்ளார். அடுத்த சில மணிநேரத்தில் ரயில் ஸ்ரீரங்கம் வந்தடைந்ததும், அங்குள்ள ரயில்வே போலீசாரிடம் மாணவி புகார் செய்தார்.

இதுபற்றி விசாரித்ததில், பாலியல் சீண்டல் செய்தது உறுதியானது. சிவகங்கையை சேர்ந்த சிவக்குமார் சென்னையில் என்ஜீனியராக பணிபுரிகிறார். ஊருக்குச் செல்லும் வழியில் இத்தகைய விபரீதத்தில் மாட்டிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.