பைபோலார் டிசார்டர்! தற்கோலை முயற்சி! பெரும் துன்பத்தில் இருந்த ரசிகையை காப்பாற்றிய ரஜினி! நெகிழ்ச்சி செயல்!

நடிகர் ரஜினிகாந்த்தை பார்த்த பிறகு மன அழுத்தக் கேளாறால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


சென்னையை சேர்ந்த அனீஷா என்ற பெண் பைபோலார் மற்றும் மன அழுத்தக் கோளாறுகள் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தற்கொலைக்கு கூட முயன்றதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் உடல்நிலை மோசம் அடைய எப்படியாவது குணம் அடைய வேண்டும் என்று லட்சக் கணக்கில் பணம் செலவு செய்துள்ளார்.

ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அனிஷாவுக்கு கிட்டியது. அவரை பார்த்த உடன் தன்னுடைய உடல்நிலையில் மாற்றம் நிகழ்வதாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அனிஷா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்துடனான சந்திப்பு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய சக்திகள் உள்ளதாக பெருமையுடன் கூறும் அனிஷா ஒரு ரசிகையாக அவரை நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.