சென்னையில் இயங்கி வரும் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவனம் 'குயின்ஸ் லேண்ட்' பூங்காவை தற்காலிகமாக மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
12 பேரின் உயிருக்கு உலை! குயின்ஸ்லேண்ட் தீம் பார்க்குக்கு அதிரடி தடை!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இயங்கி வந்த குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று இயங்கி வருகிறது அதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விளையாடும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. பூங்காவில் ஃப்ரீஃபால் எனப்படும் ராட்சத ராட்டினம் சாதனம் அறுந்து விழுந்த நிலையில் அந்த பொழுதுபோக்குப் பூங்காவை மூட காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் ஒரு நாள் முழுவதும் இந்த பூங்காவில் தங்களின் விடுமுறை நாளை கழித்துச் செல்வது வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் இல்லாமல் மற்ற நாட்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பொழுதுபோக்குப் பூங்காவில் 'ப்ரீ பால்' என்ற ராட்சத ராட்டினம் போன்ற விளையாட்டு சாதனம் உள்ளது.
மிக உயர்ந்த டவர் போன்ற அமைப்புடன் இணைக்கப்பட்ட பெட்டி போன்ற அமைப்புகளில் மக்களை அமரச்செய்து மேலிருந்து வேகமாக கீழே விழுவது போன்று இந்த விளையாட்டு சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆட்டத்திற்கு சுமார் 12 நபர்கள் மட்டுமே அமர்ந்து கீழிருந்து மேலாக சென்று தலைகீழாக திரும்பி திரும்பவும் சென்ற இடத்திற்கே வந்து நிற்கும்.
இந்த ராட்டினத்தின் பெட்டிகள் கயிறு போன்று ஒரு இரும்புக் கம்பியினால் இணைக்கப்பட்டிருக்கும், நேற்று திடீரென அதன் கயிறு அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அதில் இருந்த 12 நபர்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ராட்டினத்தில் கயிறு கீழே வந்த பிறகு அருந்து விழுந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து ஒன்று தடுக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பூங்காவை தற்காலிகமாக மூடி வைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.