தோசையில் விஷம்! சாப்பிட்டு உயிரிழந்த கணவன்! விடிய விடிய சடலத்துடன் படுத்து தூங்கிய மனைவி! சென்னை திகில்!

காதலித்த திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு தோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.


சென்னை புழல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் 5 வருடங்களுக்கு முன்னர் விழுப்புரத்திற்கு திருமணத்திற்கு சென்றிருந்தபோது அங்கு வந்த அனுசுயாவை பார்த்த உடன் பிடித்துபோனது. இதையடுத்து இருவருக்கும் காதல் மலர வீட்டில் பெரியவர்களும் சம்மதம் தெரிவிக்க திருமணம் இனிதே நிறைவேறியது. இவர்களின் இல்லறத்திற்கு அடையாளமாக 4 வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளான். 

சுரேஷ் கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். பட்டப் படிப்பு முடித்த அனுசுயா ஒரு மருந்துக் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மனைவி அனுசுயா மீது அடிக்கடி சந்தேகம் வந்துள்ளது சுரேஷுக்கு. செல்போனில் யாரிடமாவது பேசினால் கூட வீணாக சந்தேகப்பட்டு அவரை திட்டி வந்துள்ளார்.  

இதனால் மனவேதனை அடைந்த அனுசுயா கணவரை கொன்றுவிட முடிவு செய்தார். இதற்காக தன்னுடைய கிராமத்தை சேர்ந்த நண்பர் முரசொலி மாறன் என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடு. யாருக்கும் சந்தேகம் வராது என கூறியுள்ளார்.

இதையடுத்து மருந்துக் கடையில் இருந்து தூக்க மாத்திரைகளை எடுத்து வந்த அனுசுயா தோவை மாவில் கலந்து தோசை சுட்டு கணவர் சுரேஷூக்கு ஆசையாக பரிமாறி உள்ளார். அதை சாப்பிட்டவுடன் சுரேஷ் தூங்கிவிட்டார். பின்னர் அங்கு வந்த அனுசுயாவின் நண்பர் முரசொலி மாறன் உறங்கிக் கொண்டிருந்த சுரேஷின் கால்களை பிடித்துக் கொள்ள அவரது கழுத்தை துப்பட்டாவால் நெருக்கி பத்திரமாக பரலோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சுரேஷ்.

இதன் பின்னர் சடலத்துக்கு அருகிலேயே தூங்கி எழுந்தார் அனுசுயா. இதையடுத்து கணவர் அதிகமாக மதுபானம் குடித்து விட்டு இறந்துபோனதாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அனுசுயா.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுரேஷின் கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான அடையாளத்தை கண்டனர். இதையடுத்து அனுசுயாவிடம் போலீசாரிடம் துருவி துருவி விசாரிக்க கணவரை நண்பருடன் சேர்ந்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அனுசுயா அவரது நண்பர் முரசொலிமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.