சென்னையில் ஆண்களின் அந்த உறுப்பை அறுத்து எடுக்கும் சைக்கோ! தனிப்படை போலீஸ் தேடுகிறது!

சென்னையில் சாலையோரம் மயங்கிக் கிடக்கும் ஆண்களில் அந்த உறுப்பை அறுத்து எடுத்துச் செல்லும் சைக்கோ கொலைகாரன் போலீசார் தேடி வருகின்றனர்.


கடந்த வாரம் சென்னை கொளத்தூர் அருகே உள்ள பாலத்தின் அடியில் அஸ்லம் எனும் நபர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது ஆணுறுப்பை அறுத்து எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனது கணவரின் அந்த உறுப்பை காணவில்லை என்று காவல் நிலையத்தில் அஸ்லம் மனைவி புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அஸ்லம் உயிரிழந்தார்.

அஸ்லம் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் போலீசார் கருதினர். இந்த நிலையில் மாதவரம் பகுதியில் நாராயணன் என்பவரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். அவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ந்து போன போலீசார் நிகழும் சம்பவங்களில் தீவிரத்தை உணர்ந்து கொண்டனர்.

அஸ்லம் குடிபோதையில் கிடந்த போது தான் அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு. இதேபோல் நாராயணனும் குடிபோதையில் இருந்த போதுதான் அவரது அந்த உறுப்பை அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இருவருமே குடிபோதையில் சாலையில் மயங்கி கிடந்து உள்ளனர்.

எனவே சாலையில் மயங்கி கிடப்பவர்களை குறி வைத்து அவர்களது ஆணுறுப்பை சைக்கோ ஒருவன் அறுப்பதாக போலீசார் முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த சைக்கோவை தேடி வருகின்றனர்.