சென்னையில் ஒரு தெருவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நம்ம தல தோனிக்கு செம மரியாதை! ஒரு தெருவுக்கே தோனி பெயரை சூட்டிய பொதுமக்கள்!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த ஐ.பி.எல். டி20 தொடர்களில் மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஐ.பி.எல். டி20 லீக்கின் 12 வது சீசன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட முடியும் என்ற இலக்குடன் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், கடைசி ஓவரில் தோனியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்துக்குள்ளாக்கியது.
தமிழக மக்கள் ரசனைக்கும் தனது ரசனைக்குரியவர்களுக்கு கோவில் கட்டுதல், தெரு குடியிருப்புகளுக்கு பெயர் வைத்தல் உள்ளிட்டவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். அந்த வகையில் சென்னை பூந்தமல்லியில் ஒரு தெருவுக்கு கேப்டன் கூல் தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.