கவர்ச்சி உடை மனைவியை காட்டி செல்போன் கடைக்காரர்களை மயக்கும் டிப்டாப் இளைஞன்! பிறகு அரங்கேறும் பலே திருட்டு! வைரல் வீடியோ!

சென்னையில் பிரபல சோரூம்களில் பல கொள்ளை சம்பவங்களில் சம்மந்தபட்ட டிப்டாப் திருடனை, திருட விட்டு கையும் களவுமாக பிடித்த காவல்துறை.


சென்னை பாண்டிபசார், கோடம்பாக்கம் ,அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து திருடுப்போன கடைகளின் சிசிடிவி காட்சிகள் சோதனைக்கு உட்படுத்தபட்டபோது ஒரே நபர் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அரும்பாக்கம் பிரபல சோரூமிற்க்குள் நுழைந்தார்.,தனது மனைவியுடன் விலை உயர்ந்த செல்போன் வாங்குவது போல நடித்து, சேல்ஸ்மேன் கவனத்தை திசை திருப்பி திருடுவதை வாடிக்கையாக கொண்ட டிப்டாப் இளைஞர் ஹாரூன்

அன்று சோரூமில் நுழைந்தபோதே காவல் துறைக்கு தகவல் கொடுக்கபட்டதை அடுத்து சாமர்த்தியமாக  ஹாருன் செல்போன் திருடும் வரை காத்திருந்த போலீசார் சிசிடிவி காட்சி மூலம் ஆதாரத்துடன் ஹாரூனை  கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணையில் மனைவியுடன் கடைகளுக்கு செல்லும் ஹாரூன் தனது மனைவியை செல்போன் கடைக்காரரிடம் பேச்சு கொடுக்கச் செய்வார். மனைவி சிரித்து பேசிக் கொண்டிருக்கும்போது செல்போன் கடைக்காரரின் கவனம் சிதறும். இதனை பயன்படுத்தி ஹாரூன் செல்போனை திருடியுள்ளான். இதற்கு வசதியாக மனைவிக்கு கவர்ச்சி ஆடையை அணிவித்து ஹாரூன் அழைத்துச் சென்றுள்ளான்.

கவர்ச்சி உடையில பெண் பேசுவதால் கடைக்காரர்கள் கிறங்கியுள்ளனர். இதனால் செல்போன்களையும் திருடியுள்ளனர். இதனிடையே அந்த பெண் மீது பரிதாபப்பட்டு அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. https://www.youtube.com/watch?v=PAcZaUdGeas