திருநங்கையை ஓசியில் உல்லாசத்துக்கு அழைத்து தகராறு! வசமாக சிக்கிய போலீஸ்! பின்னர் நேர்ந்த தரமான சம்பவம்!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தனிப்படை பிரிவு காவலர் திருநங்கையிடம் தவறாக நடந்ததை அடுத்து கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது..


சென்னை காவல்துறை தனிப்படை பிரிவில் பணியாற்றிவருபவர் தினேஸ் பாபு. இன்று அதிகாலையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் திருநங்கை ஒருவரிடம் சென்று இவர் சில்மிஷம் செய்துள்ளார். மேலும் அவரை உல்லாசம் அனுபவிக்க வருமாறு காவலர் தினேஸ் பாபு வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்காக பேரம் பேசிய போது திருநங்கையுடன் காவலருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.  காவலர் ஓசியில் அழைத்ததாகவும் அதற்கு திருநங்கை மறுத்ததாகவும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் காவலர் தினேஷ் பாபுவை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலயே காவலர் போலீசாரிடமும் தகராறு செய்துள்ளார்மேலும் அங்கு சென்றும் தினேஸ்பாபு  தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதுடன் உதவி ஆய்வாளர் தலையை வெட்டி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து  காவலர்கள் தினேஸ் பாபுவை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் காவலர் ஒருவரே இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.