காதல்! காமம்! 11ம் வகுப்பு மாணவியுடன் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்திய 12ம் வகுப்பு மாணவன்!

சென்னை வேளச்சேரி பள்ளியில் படித்த 11-ஆம் வகுப்பு மாணவியை மும்பைக்கு இழுத்துக்கொண்டு ஓடி குடும்பம் நடத்தி வந்த 12-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


பள்ளிப் பருவத்த்தில் குழந்தைகளாக இருக்க வேண்டியவர்களை பால் மயக்கத்துக்கு ஆளாக்கி பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப் போகச் செய்வதில் சினிமா போன்ற கேடுகெட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் முன்னிலை வகிக்கின்றன. எனினும் சினிமாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புத்தியை மக்களில் ஒரு பகுதியினர் விட்டுத் தொலைக்கவில்லை என்பதை அண்மைத் தேர்தலில் சினிமா கட்சிகளுக்கு விழுந்த ஓட்டுகள் நிரூபித்தன.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க சினிமாவின் கற்பனைக் கனவுக் கலாச்சாரத்தில் ஊறிப் போய் ஒரு 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் சென்னையில் இருந்து மும்பைக்கு ஓடிப்போ குடும்பம் நடத்திய கலாச்சாரச் சீரழிவு அரங்கேறியுள்ளது. 

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் பிளஸ்டு படித்த 17 வயது மாணவனுக்கும் காதல் என்ற பெயரில் வந்த சமாச்சாரம் அவர்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சீரழித்துள்ளது. 

இளம் வயதிலேயே காதல் கண்ட்றாவி எனத் திரிந்த ஜோடி பெற்றோரையும், படிப்பையும் மறந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானது. குழந்தைகளுக்கு (!) என்ன ஆனது என புரியாமல் தவித்த இருவரின் பெற்றோரும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து போலீசார் பள்ளி உ ள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்திய போது அது காதல் விவகாரம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து மாயமான இருவரையும் போலீசார் வலை வீசித் தேடத் தொடங்கினர். அப்போது அந்த மாணவன் ஆசை வார்த்தை கூறி மாணவியை தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து மும்பை விரைந்த போலீசார், அங்கு குடும்பம் நடத்தி வந்த இருவரையும் கையும் களவுமாக வளைத்துப் பிடித்தனர். இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் மாணவனை கைது செய்து சிறைக்கு அனுப்பி விட்டு, மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.