10 ஆண்டுகளாக பிரின்ஸ் ஜூவல்லர்சில் திருடிய பலே திருடர்கள்! 250 பவுனை ஆட்டய போட்ட அடாவடி!

பிரபல நகைக்கடை ஒன்றில், 10 ஆண்டுகளாக, திருடிவந்த, ஊழியர்கள் சிக்கினர்.


சென்னை தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்கா அருகில் தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மிக பிரபலமான இநத கடையில், பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றும் பிரிவில், லியோ, ஜான், அஞ்சித் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், 3 பேரும் கடந்த 10 ஆண்டுகளாக, அந்த கடையில் பணிபுரிகின்றனர். இவர்களின் வேலையே பொதுமக்கள் கடையில் கொண்டுவந்து விற்கும் நகைகளை உருக்கி, புதியதாக மாற்றும் பணியைசெய்வதுதான்.

இதன்போது, சிறுக சிறுக தங்கத்தை திருடியும் வந்துள்ளனர். இது எப்படியோ, கடை நிர்வாகத்திற்கு தெரியவரவே, அவர்கள் உடனடியாக, போலீசில் புகார் செய்தனர். போலீசார், இந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டனர். இவ்வாறு 250 பவுன் வரை நகைகளை திருடி விற்றதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து, மேலும் 150 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

நகைக்கடை ஊழியர்களே, இவ்வாறு நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.