ரூ.50க்கு சைக்கிள்! ரூ.200க்கு பிரிட்ஜ்! சென்னையில் அதிரடி சரவெடி ஆஃபர்! எங்கு தெரியுமா?

சென்னையில் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் மறு பயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்களை மட்டுமே குறைந்த விலைக்கு விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஒரு புதிய சந்தையை அறிமுகம் செய்துள்ளது.


சென்னை மாநகரில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் வசிக்காமல் அங்குள்ள தனியார் பிளாட்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மிகக் குறைந்த அளவில் அவர்களே விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஒரு புதிய மலிவு விலை சந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் சென்னை மக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையான பொருட்களை மட்டுமே அந்த சந்தையில் விற்பனை செய்ய முடியும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரில் மட்டுமே அதிக அளவில் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அவை அனைத்தும் பெசன்ட்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் மறுபயன்பாட்டு பொருட்கள் சந்தைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு சந்தையானது நேற்று மதியம் தொடங்கியது.

இன்று மாலை 6 மணி வரை இந்த சந்தை நடைபெறவுள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சந்தையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக் கூடிய பழைய பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். அதில் புத்தகங்கள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், மின்னணு பொருட்கள், மரச் சாமான்கள், பொம்மைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், குடை, மழை கோட், பைகள், சூட்கேஸ், சைக்கிள், செயற்கை ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், எலக்ட்ரானிகள் பொருட்கள், பர்னிச்சர்களை விற்பனைக்கு வைத்தனர்.

அதிக அளவு மக்கள் இந்த சந்தையில் பங்கேற்ற தங்களுக்கு தேவையான பொருட்களை குறைவான விலையில் வாங்கி சென்றுள்ளனர்.இந்த சந்தையில் பயன்படுத்த தகுந்த பிரிட்ஜ் ரூ.200-க்கும், மைக்ரோ ஓவன் ரூ.100-க்கும், சோபா செட் ரூ.100-க்கும், சிறுவர் சைக்கிள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த மலிவு விலை சந்தையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை நன்கொடையாகவும் வழங்கலாம் எனக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இந்த மலிவு விலை சந்தையானது இன்றும், நாளையும் நடக்கிறது. இந்நிலையில் அதிகளவு மக்கள் இந்த சந்தையில் பங்கேற்ற தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று செல்லுமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.