ஸ்கூலுக்கு தனியாக செல்லும் மாணவிகளின் வாயை கடித்து வைக்கும் சைக்கிள் சைக்கோ! சென்னை பரபரப்பு!

சென்னையில் 10ற்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்து வந்த மர்ம ஆசாமியை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


சென்னை மயிலாப்பூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவிகளை குறிவைத்து மர்ம ஆசாமி ஒருவர் பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு பள்ளியை குறிவைத்து பின் அப்பள்ளியில் தனது வேலையை இவன் காட்டியுள்ளான்.

 பெற்றோர் தோழிகளுடன் வராமல் தனியாக வரும் மாணவ மாணவிகள் யார் என்று நோட்டமிட்டு பின் அவர்களை பின் தொடர்ந்து சென்று ஆளில்லா இடங்களில் வைத்து அந்த சிறுமிகளின் அந்தரங்கப் பகுதிகளில் கை வைத்து சில்மிசம் செய்துவிட்டு பின் தப்பி ஓடி விடுவான். இவ்வாறு தொடர்ந்து இவன் பாலியல் செயலில் ஈடுபட்டு வர பல மாணவிகள் புகார் அளிக்க பயம் தெரிவித்தும் ஒரு சில மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வரவும் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஐந்தாம் வகுப்பு மாணவியை குறிவைத்த காமக்கொடூரன் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளான். பள்ளி வளாகத்திற்குள் மாணவி செல்ல காமமுகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளான். பின் வளாகத்தில் யாரும் இல்லாததை அறிந்து உள்ளே சென்று மாணவியின் வாயை கடித்து விட்டு தப்பியோடி உள்ளான். இதில் வலியால் அலறி துடித்த மாணவியை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர்.

தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட cctv காட்சிகளை ஆராய்ந்த பொழுது மாணவிக்கு நேர்ந்த கொடுமை தெரிய வந்தது. பின் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல் ஆய்வாளர் கமலா தேவியுடன் புகார் அளிக்கப்பட்ட அவர் தலைமையாசிரியரை மிரட்டியுள்ளார். இதேபோல் யாரையெல்லாம் காமுகன் பாலியல் தொந்தரவு செய்தானோ அவர்கள் பெற்றோர்கள் புகார் அளிக்க வந்த போதும் இதேபோல் மிரட்டியுள்ளார்.

பின் இதுகுறித்து காவல் ஆணையருக்கு தெரிவிக்கப்பட ஆய்வாளர் கமலாதேவி யை ஆயுதப்படைக்கு மாற்றியும் காமுகனை பிடிக்க தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் பிள்ளைகள் சிறுமிகளை பெற்றோர்கள் தனியாக வெளியில் அனுப்பும் பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.