அப்பா மாதிரினு சொன்னார்! கேட்டதெல்லாம் கொடுத்தார்! அதான் கூப்பிட்ட போதெல்லாம் போனேன்! இளம் பெண் பகீர் வாக்குமூலம்!

சென்னையில் கற்பூர வியாபாரியான அம்மன் சேகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து கொலைக்கு காரணமாக இருந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்மன் சேகர் இவர் கற்பூர வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் இதையடுத்து கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது மனைவி நாகலட்சுமி தெரிவித்ததாவது தனது கணவருக்கு மகளின் தோழி யுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் வாக்குமூலம் அளித்த நிலையில் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளம்பெண் கூறியதாவது அம்மன் சேகரின் மகளும் நானும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அடிக்கடி அவரின் மகளை காண நான் அங்கு சென்று வருவேன் அப்போது அம்மன் சேகர் என்னை அவரது சொந்த மகள் போலவே பார்த்துக்கொள்வார். 

இதனால் நான் அவரை அப்பா என்று தான் அழைத்து வந்தேன். இதையடுத்து அவர் என் மீது தனி கவனம் செலுத்தி பார்த்துக்கொள்வார் நான் எது கேட்டாலும் வாங்கி வந்து கொடுப்பார். இதையடுத்து அவர் மீது எனக்கும் ஒரு அபரிமிதமான அன்பு இருந்துவந்துள்ளது.இதையடுத்து அவர் என் மீதும் அதிக அளவு அன்பு வைத்துள்ளார். இதையடுத்து இந்த விஷயம் அவரது தாய் நாகலட்சுமி தெரியவர அவர் கண்டித்துள்ளார்.

இதையடுத்து கற்பூர வியாபாரம் செய்து வருவதால் என இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று நான் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். பின்னர் அவர் என்னுடன் பழகுவதை இரு குடும்பத்தாரும் எதிர்த்தனர். இதையடுத்து நானும் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன் ஒருநாள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று இருவரும் செல்பி எடுத்துக் கொண்டும் இந்நிலையில் தற்போது எனக்கு திருமணம் முடித்து வைக்க வீட்டில் வரன் பார்த்து வருகின்றனர் இந்த செய்தியை அறிந்த அம்மன் சேகர் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.

நான் உடனே பதறிப்போனேன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனைவரிடமும் காட்டி விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து பதறிப்போன நான் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன் இதை எடுத்து அவரது 60ஆவது பிறந்தநாள் விழாவிற்கு பரிசு தருவதாக வரச்சொல்லி கையில் வைத்திருந்த பசையை அவரது முகத்தை தடவினேன் பின்னர் எரிச்சல் தாங்க முடியாமல் துடித்தார். அவரை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்தேன் என காவல்துறையினர் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தபோது அதற்கு அந்தப் பெண் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை நான் மட்டுமே இந்த கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.